இந்த வலைப்பதிவில் தேடு

16 ஆயிரம் ஆசிரியர்களை இடம் மாற்ற அரசு உத்தரவு

திங்கள், 24 ஜூன், 2019

அரசு பள்ளிகளில் கூடுதலாக உள்ள, 16 ஆயிரம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை, 8ல் நடக்கிறது. அதற்கு முன், அரசு பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர்கள், 2,008; பட்டதாரி ஆசிரியர்கள், 271 என, 2,279 பேர், மாணவர் விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர்.


பள்ளி கல்வியில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், 208; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 13 ஆயிரத்து, 623 என, மொத்தம், 13 ஆயிரத்து, 831 பேர், மாணவர் விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர்.தொடக்க கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளில் சேர்த்து, மொத்தமாக, 16 ஆயிரத்து, 110 ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களை, போதிய மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, பணி நிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
 

Popular Posts

Recent