இந்த வலைப்பதிவில் தேடு

விரைவில் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

திங்கள், 24 ஜூன், 2019

''அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அவர் கூறியதாவது:ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழு கூட்டம், ஜூன், 30ல், சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.ஜெ., முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மதுரை மாவட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும்; தவறினால், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
 

Popular Posts

Recent