இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? - கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!!

சனி, 10 ஆகஸ்ட், 2019




தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது.



அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.



உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

மொத்தமாக அரசுப் பள்ளிகளில் 2,28,990 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,360 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து அரசு பள்ளிகளுக்கு தேவையான உடற்பயிற்சி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என சேர்த்து மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent