இந்த வலைப்பதிவில் தேடு

நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல்

சனி, 10 ஆகஸ்ட், 2019



மதுரையில் இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நேர்காணல் நடந்தது.செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இம்மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் 51 ஆசிரியர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் டி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி, மீனாவதி, பி.இ.ஓ., ஜான் கென்னடி அலெக்சாண்டர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சின்னதுரை கொண்ட தேர்வு குழு நேர்காணல் நடத்தியது. 45 பேர் பங்கேற்றனர். 6 பேர் வரவில்லை. ஆசிரியரின் புதுமை கற்பித்தல் முறை, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கைக்கான முயற்சி, மன்ற செயல்பாடு, சமூகத்திற்கான பங்களிப்பு, கற்பித்தல் பணியை தாண்டி கூடுதல் தகுதிகள் குறித்து பரிசீலிக்கப்பட்டன.

சுவாமிநாதன் கூறியதாவது: விண்ணப்பங்கள் அடிப்படையில் தொடக்க, நடுநிலை பள்ளிகள் சார்பில் - 12, உயர் மற்றும் மேல்நிலை சார்பில் - 12 (1:2 வீதம்) மெட்ரிக் பள்ளிகள் சார்பில் - 4 (1:4 வீதம்) பேர் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு இயக்குனருக்கு அனுப்பப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent