இந்த வலைப்பதிவில் தேடு

தலைமுடி உதிரக்காரணம் என்ன ? அதைத் தடுக்க முடியுமா ?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019



தலைமுடி உதிரக்காரணம் என்ன ? அதைத் தடுக்க முடியுமா ?

தலைமுடி உதிர்வது பல காரணங்களால் நிகழ்கிறது . 

கிருமிகள்,  இரும்பு-துத்தநாக சத்துக் குறைபாடு, புரதச் சத்துக் குறைபாடு, தைராய்டு -  முதலிய  ஹார்மோன்களின் சுரப்பு விகித மாறுபாடு, மிகையான வைட்டமின் ஏ மாத்திரைகள்  -  கருத்தடை மாத்திரைகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை அதிக அளவு உட்கொள்ளுதல், சிபிலிஸ் போன்ற நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு, டைபாய்டு, தைராய்டு நச்சுநிலை, மனக்கவலை, மன அதிர்ச்சி, குழந்தை பிறந்த பின்னர், மாதவிடாய் நின்ற பின்னர், தொடர் காய்ச்சலுக்குப் பிறகு போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்கிறது.

சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை செய்யலாம். 

காளான் எதிர்ப்பு மருந்துகள் சில சமயங்களில் பலனளிக்கும். 

ஹைட்ரோகாரட்டினோனை வழுக்கைத் தலையில் ஊசி மூலம் செலுத்தி சிலர் வெற்றி கண்டுள்ளனர். 

மேலை நாடுகளின் உரோமங்களை நடுதல் (Transplantation) செய்து வெற்றி கண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent