இந்த வலைப்பதிவில் தேடு

மத்திய அரசு பணியாளர்களுக்கு ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா?

திங்கள், 5 ஆகஸ்ட், 2019



மத்திய அரசு பணியாளர்களில் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களின் பணித்திறமை உட்பட பணி தொடர்புடைய சில முக்கிய அம்சங்களை கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டது. உடனே மறுத்து விட்டது அரசு என்றாலும், அந்த பயம், 50 வயதை எட்டிய லட்சக்கணக்கான பேரை இன்னமும் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

* ஒருவரின் வாழ்வில் பணிக்காலத்தில் 50 வயது மேல் உள்ள காலகட்டம் என்பது மிக மிக முக்கியமானது; அதை கடந்து விட்டால் அவர் தைரியமாக இரண்டாவது இன்னிங்ஸ் வாழ்க்கையை எதிர்கொள்ளலாம். 



* அதுவரை பணியில் மூழ்கி, உழைத்து உடலளவில் சோர்ந்து போயிருப்பவர்கள் அவர்கள். அப்போது தான் அவர்களுக்கு வீட்டு கடமையே பெரும் சுமையாக தலையில் விழும். ஆம், பெண்ணின் திருமணம். அடுத்த மகன்/மகளின் வேலை வாய்ப்பு.

* ஒரு பக்கம் இந்த கடமையை நிறைவேற்ற துடிக்கும் அந்த 50 வயதுக்காரருக்கு மனது தீரத்தை காட்டினாலும், உடல் தளர்ந்து போய் விடும். அப்படியும் அவர் விடாமல் கடமையை நிறைவேற்ற  தயாராகி விடுவார். 

இன்னொரு பக்கம், அந்த வயதில் தான் பலருக்கும் ஷுகர், பீபி என்றெல்லாம் உறவு கொண்டாட வரும். டாக்டரிடம் காட்டியபோது அதை தெரிந்து கொண்டால் போதும், மனதும் தளர்ந்துபோகும். 



இப்படிப்பட்ட வயதில் ஒருவரை வீட்டுக்கு அனுப்புவது என்பது, உண்மையாக சொல்லப்போனால், அவரை மட்டுமல்ல, அவர் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்துவதற்கு சமம். மத்திய அரசு பணிகளில் எத்தனை லட்சங்களோ தெரியவில்லை; ரயில்வே தனியார் மயம் தகவல் வந்ததில் இருந்து 3 லட்சம் பேர் வரை விடுவிக்க நிர்வாகம் தயாராகி விட்டதாக தொழிற்சங்கங்கள் இப்போதே வேதனை தெரிவிக்கின்றன. 

இதோ நான்கு திசைகளில் ஒரு அலசல்: 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent