தமிழ் ஒரு தாள்
ஓர் அலசல்.
வினாத்தாள் அருமை.
பாடநூலின் அனைத்து பகுதிகளுக்குமான கற்றலடைவுகளை மாணவர் பெற்றதையும், அறிந்ததையும், புரிந்துகொண்டதையும்,
மொழியை சுயமாக பயன்படுத்தும் செயலையும்
சோதிக்கும் வகையில் உள்ளது.
பரவலாக தமிழாசிரியர்களால் வரவேற்பைப் பெற்றாலும், சிலர் எதிர் கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.
வினாத்தாளை ஆக்கபூர்வமான வகையில் பகுப்பாய்வு செய்வோம்.
அதில் முக்கியமானது பகுதி 5.
இதில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு
(உடைநடை,
செய்யுள்,
விரிவானம்,
கடிதம்,
பொதுக்கட்டுரை)
மதிப்பெண் குறைவு.
இல்லை என்பதே தெளிவான செய்தி.
ஏனெனில்
இரு தாள்கள் இருந்தபோது
இவற்றிற்கு 8 மதிப்பெண் (200 க்கு 8 மதிப்பெண்கள்) வழங்கப்பட்டாலும்,
மாணவன் இறுதியில் 100 க்கு பெற்ற மதிப்பெண் 4 தான்.
ஆனால்,
இப்பொழுது நிலைமை வேறு.
அவன் 100 க்கு முழுமையாக 6 மதிப்பெண் பெறுகிறான்.
மாணவர்கள்
தாங்கள் கற்றதை, உள்வாங்கியதை,
உணர்ந்ததை,
தன் கற்பனையை,
கற்றதைப் பயன்படுத்தும் திறன் அடைந்ததை
சுருக்கமாக,
அதே சமயத்தில்
தெளிவாக,
கூற வேண்டியதை சுருக்கமாக,
எழுத்தில் வடிக்கும் திறனை
வெளிப்படுத்தும் வகையில் இவ்வினாக்கள் தகவமைப்பைப் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம்.
எடுத்துக்காட்டாக
கட்டுரை வினாவிற்கு விடையாக
தெளிவான அறிமுகம்,
தலைப்பு அல்லது வினா குறித்த தெளிவான 4 (5) கருத்துகள்,
முத்தாய்ப்பான இறுதி பகுதி
அமைவது போதுமானது.
நாமிருப்பது நவீன யுகம்.
அனைவரும் அவசர கதியில்
அவரவருக்கே உரிய வேகத்தில் பயணிக்கிறோம்.
துரிதம்,
சுருங்கச் சொல்லுதல்,
அழுத்தமாகச் சொல்லுதல்,
வலியுறுத்திச் சொல்லுதல்,
தெளிவாகச் சொல்லுதல்,
விரைவாகச் சொல்லுதல்
போன்றவையே வருங்கால இளைய தலைமுறையினர் எதிர்பார்ப்பு.
அதை உள்வாங்கிய வகையில்,
உருவாகும் வகையில்
அமைக்கப்பட்ட வினாத்தாள் இது.
பல பாடல்களைக் கொண்ட இராமாயணத்தை(காவியங்களை) நாற்பது நாளிலும் சொல்லலாம்,
நான்கு மணி நேரத்திலும் சொல்லலாம்,
நான்கு வாக்கியங்களிலும் சொல்லலாம்.
இலக்கியச்சுவை உணர்தல், அறிதல், தெரிதல், புரிதல், . . . ஆகியவை
சொல்பவர் மற்றும் கேட்பவர்
காலம், ஆர்வம், நேரம், ... ஆகியவற்றை உள்ளடக்கியது.
பழையன கழிதலும்,
புதியன புகுதலும் வழுவல
என்பதை
உணர்ந்தவர்கள்
உணர்த்துபவர்கள்
நாம்.
உணர மறுப்பவர்களும் (பழமையில் அதீத ஆர்வம் கொண்டவர்கள்) நம்மில் வெகுசிலரே!
வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப இவ்வடிவமைப்பை முழுமையாக வரவேற்போம்.
வினாத்தாள் வடிவமைப்பில்
சில வினாக்கள் எப்பகுதியிலிருந்து (எப்பாடப்பகுதியிலிருந்து அல்ல) கேட்கப்படலாம் என்பதை
முதலில் நாம் தெளிவு பெற்றுக்கொள்ளலாம். (வினாத்தாள் பகுப்பாய்வு மூலம் அல்லது அரசின் வழிகாட்டுதல்களைப் பெறுதல் மூலம்) மாணவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
வினாத்தாள் வடிவமைப்பில்
மேலும் சில வினாத்தாள்கள்
அரசிடமிருந்து கிடைக்கப்பெற்றால் நலமாக இருக்கும்.
இல்லையென்றாலும் ஒன்றும் பாதகமில்லை.
வினாத்தாள் எவ்வகையில் இருக்கும் என்றத் தெளிவை வர இருக்கும்
(முழுமையான பாடப்பகுதியைக் கொண்ட) மாநில அளவில் அரசால் நடத்தப்படவுள்ள (புத்தக மற்றும் உருவாக்கப்பட்ட வினாக்களுடன் கூடிய) பொதுத்தேர்வுகளான,
அரையாண்டு,
திருப்புதல் 1,
திருப்புதல் 2
வினாத்தாள்கள் நமக்கு நல்ல புரிதலையும்,
தெளிவையும்
கொடுக்கும்.
அரசுப் பொதுத்தேர்வுக்கு வழங்கப்படுவதைப்போல் மேற்கண்ட பொதுத்தேர்வுகளுக்கும் விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டால் மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.
விடைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும்,
எவ்வாறு இருந்தால் போதும் என்ற புரிதலைப்பெற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
உரியவர்கள் சரியான நேரத்தில், விரைவாக செயலாற்றினால்
அனைவரும் மகிழ்வர்.
தமிழ் நவீனமாக வளர்த்தெடுக்க முன்வருவோம்!
முயற்சிப்போம்!
சாதிப்போம்!
வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!!
சிவ. ரவிகுமார்
வேலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக