இந்த வலைப்பதிவில் தேடு

திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க .!

செவ்வாய், 24 செப்டம்பர், 2019





வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.




வாட்ஸ்ஆப் நிறுவனம்
அதன்படி இந்நிறுவனம் அனைவரும் அதிமாக எதிர்பாரக்கும் அம்சத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப்பில் பகிரும் ஸ்டேட்டஸை, பேஸ்புக் ஸ்டோரியாகவும் பகிரந்து கொள்ளும் ஒரு புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.



ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்
குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும்
கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் இந்த புதிய அம்சம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.


  ஸ்டாண்டர்ட் மற்றும் பீட்டா
இந்த புதிய அம்சம் ஆரம்பத்தில் சோதனைக்கு உட்பட்டது என்றும் பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்ற கருத்து மக்களிடையே இருந்தது,ஆனால் தற்சமயம் இது பயனர்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான சமீபத்திய ஸ்டாண்டர்ட் மற்றும் பீட்டா பதிப்புகளிலும் கிடைக்கும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.



  ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.258
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.258 பதிப்பிலும், ஐபோன் வெர்ஷன் 2.19.92 பதிப்பிலும்
இந்த புத்தம் புதிய வசதி கிடைக்கும். மேலும் வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அம்சம் வழங்கப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  பேஸ்புக் ஸ்டோரியாக உருவாகும்
மேலும் நீங்கள் இந்த புதிய அம்சத்தை பெற்றவுடன்,வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அப்டேட் நிகழ்த்தியதுமே Status Tab-ன் கீழ் Share to Facebook Story எனும் ஒரு பொத்தான் இருக்கும், அதை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும் உங்கள் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பேஸ்புக் ஸ்டோரியாக உருவாகும் என்பது குறிப்பிடத்தக்ககது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent