இந்த வலைப்பதிவில் தேடு

4 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு

செவ்வாய், 3 செப்டம்பர், 2019



வடமேற்கு வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நான்கு மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வடமேற்கு வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், அரியலுார், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, துாத்துக்குடி ஆகிய, 16 மாவட்டங்களில், இன்று லேசானது முதல், மிதமான வரையிலான மழை பெய்யலாம்.

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் ஆகிய, நான்கு மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent