இந்த வலைப்பதிவில் தேடு

காலாண்டு தேர்வு இன்று நிறைவு - நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை

திங்கள், 23 செப்டம்பர், 2019





தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், இன்றுடன் காலாண்டு தேர்வு முடிகிறது. நாளை முதல், ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு, செப்., 12ல் துவங்கியது. மொழி பாடங்கள், முக்கிய பாடங்கள் மற்றும் இணை படிப்புகள் உள்ளிட்ட அனைத்துக்கும், தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இன்றுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. 



இதை தொடர்ந்து, நாளை முதல், அக்., 2 வரை, ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.காந்தி ஜெயந்தி, அக்., 2ல் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகள் திறக்கும், அக்., 3ல் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, இம்மாதம், 30ம் தேதியில் இருந்து, முதல் பருவ தேர்வுகள் துவங்க உள்ளன. இடைபட்ட நாட்களில், காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்பின், அக்டோபர், 25 முதல், முதல் பருவ தேர்வுக்கான விடுமுறை விடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent