இந்த வலைப்பதிவில் தேடு

எழுச்சி தரும் எழுத்தறிவு! :இன்று உலக எழுத்தறிவு தினம்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019



ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966ம் ஆண்டு முதல் செப்., 8ல், சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'எழுத்தறிவு மற்றும் பன்மொழி பேசுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எது எழுத்தறிவு

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.

என்ன பயன்

எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.

7,000

உலகளவில் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.
86.3
15 - 24 வயதுக்குட்பட்டவர்களின் உலக சராசரி எழுத்தறிவு சதவீதம் 86.3. இந்தியாவின் எழுத்தறிவு 2011 சென்சஸ் படி, 86.1 சதவீதம்.

10ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 15 - 24 வயதுக்குட்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு பேர், எழுத, படிக்க தெரியாதவர்களாக இருந்தனர். தற்போது இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

75
உலகில் 75 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். இதில் மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள். 2030க்குள் அனைவருக்கும் எழுத்தறிவு கிடைக்க வேண்டும் என 'யுனெஸ்கோ' அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent