இந்த வலைப்பதிவில் தேடு

ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.144.50 கோடி ஒதுக்கீடு

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019





ஊரக பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றியஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களுக்கு, சுற்றுச்சுவர் மற்றும் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க, 144.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.


'நடப்பு நிதியாண்டில், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு, 250 கி.மீ., நீளத்திற்கு, 144.50 கோடி ரூபாயில், சுற்றுச்சுவர் மற்றும் வெள்ள தடுப்பு சுவர் கட்டப்படும்' என, ஜூலை, 8ல், சட்டசபையில், உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி அறிவித்தார்.அதன்படி, இப்பணியை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் முடிவு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.கருத்துருவை பரிசீலித்த அரசு, மத்திய அரசின், 75 சதவீத பங்களிப்புடன், 144.50 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை பிறப்பித்து உள்ளது.சுற்றுச்சுவர் கட்டுவதால், பள்ளி வளாகத்திற்குள், வெளிநபர் மற்றும் விலங்குகள் நுழைவது தடுக்கப்படும். பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும். பெண் குழந்தைகள் பாதுகாப்புடன், படிப்பை தொடரலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent