இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019



அரசு கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களை, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு, புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி சட்டசபையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து, நேற்று முன்தினம், கல்வித் துறை அமைச்சர், கமலக்கண்ணன் பேசியதாவது:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், பிளஸ் 2 வரை படித்து முடித்த மாணவர்களுக்காக, அனைத்து அரசு கல்லுாரிகளிலும், 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய, உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாணவர்களிடமிருந்து, கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு, அவர் பேசினார்.

புதுச்சேரி மாநிலத்தில், மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஜூனியர் காலேஜ், சிறப்பு பள்ளிகள் என, மொத்தம், 710 பள்ளிகள், அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த காலங்களில், இந்த பள்ளிகளில், 1.80 லட்சம் மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, 90 ஆயிரத்திற்கும் குறைவாகவே, மாணவர் எண்ணிக்கை உள்ளது.புதிய அறிவிப்பால், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent