இந்த வலைப்பதிவில் தேடு

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? டி.ஆர்.பி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

வியாழன், 5 செப்டம்பர், 2019



மதுரை தயானா, சென்னை குழந்தைவேல், ரோஹினி, விழுப்புரம் விஜயகுமார், ஞானவேல் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், தமிழ் வழியில் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 23-ந் தேதி நடந்த தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் நடத்தியது ஏற்புடையதல்ல. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆஜராகி வாதாடினார். பின்னர் நீதிபதி, ‘கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? என்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நாளை (வெள்ளிக்கிழமை) பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent