1. ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசம் தான். அதேநேரம் இனி, மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே 6 பைசா ஒரு நிமிடத்திற்கு வசூலிக்கப்பட உள்ளது.
2. ஜியோ இதுவரை மற்ற ஆப்பரேட்டர்களுடன் பேசுவதற்கான கட்டணமான 6 பைசாவை தானே ஏற்றுக்கொண்டது
3. டிராயின் விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்க முடிவு செய்துள்ளது.
4. இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் அரசாங்கம் தள்ளுபடி செய்வதாக இருந்தது, இப்போது இதை அமுல் செய்யாத காரணத்தால் ஜியோவிற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஆகிறதாம்.
5. இந்த கட்டணம் தற்காலிகமானது என்றும், அரசாங்கம் இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை தொடரும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.
6. சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும் என்று ஜியோ அறிவித்துள்ளது
7. இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும் (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது குறைவான கட்டணம் என்று ஜியோ சொல்கிறது.
8. மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9. ஜியோவில் இருந்து ஜியோவிற்கு அழைப்பது எப்போதும் இலவசம் ஆகும்.
10. ஜியோ சிம் அபிமான ஆப்பரேட்டராக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கிறது என ஜியோ நிறுவனம் தனது அறிவிப்பில் உறுதி அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக