இந்த வலைப்பதிவில் தேடு

இன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது?

வெள்ளி, 11 அக்டோபர், 2019




ஒரு ஆசிரியராக வேதனைப்படுகிறேன்!

"படிப்பதும் எழுதுவதும் கற்றலில் இரண்டு உட்கூறுகள் தான்,
ஆனால், ஒரு குழந்தை சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கு
இந்த இரண்டு திறன்கள் மட்டுமே போதுமா?

போதும் என்கிறது இன்றைய கல்வி முறை!

விளைவு....

?????????


"கல்வி முறையில்
தேவைப்படும் மாற்றங்களை
முன்மொழிய
தோழமையோடு
அழைப்பு விடுக்கிறேன்!

1.பள்ளிக்கூடம் வெறும் எண்ணையும், எழுத்தையும் மட்டும் தான் சொல்லிகொடுக்கும் இடம் என்றால்... "பள்ளித்தலமனைதையும் பயிர் விளையும் நிலங்கள் செய்வோம்! பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும்! சொந்த மண்ணையும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது? பக்கத்து தெருவில் இருக்கும் மருத்துவமனை பற்றியோ, அஞ்சல் நிலையத்தையோ, காவல் நிலையத்தையோ அணுக தெரியாத குழந்தைக்கு அமெரிக்காவின் அரசியல் நிலைமை என்ன எதிர்காலத்தை தந்துவிட முடியும்?

"என் பனி நோக்குனர் ஒருவர் என்னிடம் கேட்க்கிறார்..... என்னப்பா, பாடம் நடத்தத்தானே அரசு சம்பளம் கொடுக்குது? அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே! இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக? (முடியாதா?/நடக்காதா?) நாளுப்பேரை (சக ஆசிரியர்களை) பார்த்து கத்துக்கோ..ப்பா...

"என்னாத்தை கத்துக்கணும்????? !!!!!!!

"உள்ளூரைப் புரிந்துகொள்ளாத குழந்தைக்கு வெளிநாட்டு விசியங்களை சொல்லிக்கொடுப்பதால்.....
2. புதிய" அணுகுமுறைகளால் இன்னும் என்னரிவையும் எழுத்தறிவையும் கூட முழுமையாக ஏழைக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துவிட முடியவில்லை என்றால்... தோல்விக்கு எது காரணம்?
3.தொடக்கக் கல்வி சாதிக்க வேண்டிய தூரம் பல ஆயிரம் மைல்கள் என்றாலும், செலுத்தும் மாலுமிகளும் பயணிக்க பயணக்கலமும் உகந்தனவாக இல்லை என்பது தான் நிதர்சனம்.., வேதனை! புதிது புதியதாய் "கல்வி" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா? சாத்தியமானதை இருக்கின்றனவா? என்றால்.... விடை இல்லை என்பது தான் உண்மை
4.கடந்த நூற்றாண்டின்
தொடக்கக்கல்வி நிலையை
ஆய்வுக்குட்படுத்தினால்...


"முதல் வகுப்பில் சேர்ந்த நூறுபேரில்
இருபது / முப்பது பேர் மட்டுமே
பள்ளி இறுதி வகுப்பை முடித்ததையும்,
அதிலும் குறைவானவர்களே
பட்டப்படிப்பு முடித்ததையும்...
அதில் பெரும்பாலானவர்கள்
வேலை இல்லாதோராக இருக்கும்
அவலமும் புலனாகிறது!

"இந்த கல்வி முறை வாழக் கற்றுக்கொடுத்ததா?"

"...........!"

"அப்படியென்றால் எதைத்தான் சாதித்திருக்கிறது?"

வெறுமனே,
எண் அறிவையும் எழுத்து அறிவையும் மட்டுமாவது சொல்லிக் கொடுத்திருக்கிறதா?
"அதுவும் இல்லையே ! என்கிறது ஆய்வறிக்கை...

பின் எதைத்தான் செய்தது?

5.கல்விக்காக புதுப்புது உத்திகளை புகுத்திவிட்டதாகவும்,
அதற்க்கு குழந்தைகளிடம் மிகப்பெரும் வரவேற்ப்பு இருப்பதாகவும்,
கற்றல் மனநிறைவு தரும் வகையில் நடைபெறுவதாகவும்,
தினம் தினம் ஊடகங்களில் வரும் செய்திகளும், விளம்பரங்களும்
உண்மை தானா?!!ஒரு நாளைக்கு 5.30 மணி நேரம் (பள்ளி வேலை நேரம்)
அதில்


00 மணி 20- நிமிடம் காலை இறைவணக்கம்,
00 மணி 15- நிமிடம் யோகா,
(இவை அவசியம்)
01 மணி 20 நிமிடம். (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் வீட்டுப்பாடம் திருத்த(2 பாடம் மட்டும்)
02 மணி 40 நிமிடம், (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் அடைவை பதிவு செய்ய (40x 4பாடம் x 1நிமிடம் = 160 நிமிடம்)
மொத்தத்தில் 04 மணி 35 நிமிடம் கழிகிறது!!!!!!

மீதம் இருப்பது வெறும் 55 நிமிடம் மட்டுமே!!!!

இந்த கணக்கு எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்...

"கற்பிப்பதற்கு நேரம் கிடைக்காத அளவுக்கு மதிப்பீட்டு வேலைகள் இருக்கும் போது குழந்தைகளின் வாசிப்பு மோசமாக இருக்கிறது, எழுதத்தெரியவில்லை, என்பது போன்ற அம்புகள் எய்வது சரியா?

நன்றி: D.Meena Rajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent