இந்த வலைப்பதிவில் தேடு

15 மாவட்டங்களுக்கு Orange Alert எச்சரிக்கை! மிக கனமழை பெய்யும்!

திங்கள், 21 அக்டோபர், 2019




தமிழ்நாட்டில்  தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், கடலூர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தர்மபுரி, ஈரோடு,தேனி, கிருஷ்ணகிரிமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


கடந்த 3 நாட்களாக சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில்  மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் , திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகர்கோவிலில் 8 செ.மீ., பெருஞ்சாணி அணையில் 7 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிரா, கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரபிக்கடல் பகுதியில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent