இந்த வலைப்பதிவில் தேடு

TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு. சான்றிதழ் சரிபார்ப்பு பணி எப்போது?

திங்கள், 21 அக்டோபர், 2019



தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், வணிகவியல், கணிதம், உடற்கல்வி உள்பட 17 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகிய 2,144 பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 27, 28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் 154 மையங்களில் நடத்தியது.

இந்த தேர்வை 1 லட்சத்து 47 ஆயிரத்து 594 பேர் எழுதினர். தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பாடவாரியாக வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்களை விரைவில் அழைத்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent