இந்த வலைப்பதிவில் தேடு

30 நிமிட இலவச அழைப்பு அளித்து ஆறுதல் அளிக்கும் ஜியோ

ஞாயிறு, 13 அக்டோபர், 2019



நிமிடத்துக்கு ஆறு காசு கட்டணம் விதிக்க உள்ளதாக அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது 30 நிமிட இலவச அழைப்பு அளிப்பு குறித்து அறிவித்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் அழைப்புக்கள் அனைத்தும் இலவசம் என்னும் அறிவிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்தது. இதன் மூலம் அதன் போட்டியாளர்களான ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களைக் குறைக்கும் நிலை ஏற்பட்டது. பல வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியதால் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பில் இலவச அழைப்புக்களை ரத்து செய்தது. அதாவது ஜியோவில் இருந்து வேறு நிறுவனத்துக்கு அழைக்கும் போது அதற்கு நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த பணத்துக்கு ஈடாக இணையச் சேவை இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் ஜியோ வாடிக்கையாளர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர்.


சமூக வலைத்தளங்களில் ஜியோ மீதான கடுமையான விமர்சனம் இன்னும் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் ஜியோவின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதால் அந்நிறுவனங்கள் கடும் மகிழ்ச்சியில் உள்ளன. இதையொட்டி ஜியோ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜியோவின் கட்டண உயர்வு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. அதற்குள் வாடிக்கையாளர்கள் குறையக் கூடும் என்னும் ஊகத்தினால் ஜியா நிறுவனம் 30 நிமிடம் இலவச அழைப்புக்களை அளிக்க முன் வந்துள்ளது. ரீசார்ஜ் செய்த 7 நாட்களுக்குள் இந்த 30 நிமிட இலவச அழைப்புக்கள் செய்ய முடியும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent