இந்த வலைப்பதிவில் தேடு

5% அகவிலைப்படி உயர்வு - முதல்வருக்கு அரசு ஊழியர்கள் நன்றி

சனி, 19 அக்டோபர், 2019




தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழக அரசில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், சமையலர்கள், துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் 1-7-2019 முதல் அகவிலைப்படியை 5 சதவீதம் (12 சதவிதத்தில் இருந்து 17 சதவீதமாக) உயர்த்தி தீபாவளி பண்டிகை வரும் சமயத்தில் அறிவித்து, தீபாவளியை சிறப்பாக கொண்டாட அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent