இந்த வலைப்பதிவில் தேடு

புதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்

சனி, 12 அக்டோபர், 2019




🎙தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடங்கள் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.*


🎙வெறும் தகவல் களஞ்சியங்கள் மட்டுமே புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டு அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் அவர்கள் அதிக அக்கறைகாட்டவில்லை என்பதுதான் துரதிருஷ்டம்.

_அழுத்தம் தரும் பாடங்கள்:_

🎙கிட்டத்தட்ட அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள், உதாரணமாக, பத்தாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் அளவு கடந்த எண்ணிக்கையில் கணக்குகள் உள்ளன, அவற்றை முழுமையாகக் கற்பிக்க போதிய அவகாசம் இல்லை. புதிய கணிதப் பாடநூல்களில் விகிதமுறு எண்கள், பின்ன எண்கள், தலைகீழி போன்றவை குழப்பமூட்டும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளும் குறித்த காலத்தில் தரப்படுவதில்லை அப்படி நடக்கும் பயிற்சிகளும் போதிய பலன் தருவதில்லை என்கிறார்கள்,

🎙6,7 வகுப்புகளின் பாடநூல்களில் ஆங்கிலப் பாடங்களின் கட்டமைப்பு நன்றாக இருந்தாலும், குழந்தைகளின் வயதிற்கேற்ற சொற்களின் பயன்பாடு இல்லை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். துணைப் பாடப் பகுதியாகத் தரப்பட்டுள்ள பாடங்களில் ஆசிரியர்களை குழப்பும் வகையில் கடிணமான நடையில் எழுதப்பட்ட ஆங்கில படைப்புகளிலிருந்து உரைநடைபகுதிகளும், செய்யுள் பகுதிகளும் தரப் பட்டிருக்கின்றன என்கிறார்கள்.


🎙6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கான சமூக அறிவியலைப் பொறுத்தவரை, சில பாடங்கள் சிறப்பாக இருந்தாலும் பல வகுப்புகளுக்குப் பாடப் பொருள் மிக அதிக அளவில் தரப்பட்டுள்ளது. "தமிழ் வழியில் பயிலும் குழந்தைகளுக்கே கற்றுக்கொடுத்து தேர்வுக்கு தயாரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் சூழலில், ஆங்கில வழிக் குழந்தைகளுக்கு புரியவைப்பதிலும் பயிற்சி தருவதிலும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம்" என்கிறார்கள் ஆசிரியர்கள்.

🎙அறிவியல் ஆசிரியர்களோ, "ஒரு காலத்தில் கல்லூரி அளவில் படித்த பாடங்கள் இன்றைக்கு 9, 10 ம் வகுப்புகளில் வைக்க பட்டிருக்கின்றன. வேதியியல், இயற்பியல், உயிரியல் என அனைத்திலும் வெறும் பெயர்களைப் படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களை சலிப்படையச் செய்கிறது. 6 ம் வகுப்பிலிருந்து ஆய்வகப் பயன்பாட்டை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க அரசு உதவிசெய்தால் அறிவியலில் திறன் பெற்ற மாணவர்களை உருவாக்கலாம்" என்கிறார்கள்

_மேலும் சில பிரச்சனைகள்:_

🎙இந்தப் பாடநூல்கள் போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்புகளாகவே இருக்கின்றன எனும் கருத்து பரவலாக எழுந்திருக்கிறது. மேலும், செவித்திறன் குறைபாடு, கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு மிகுந்த சவால் அளிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

🎙ஒவ்வொரு நூலிலும், கணினிப் பயன்பாட்டை இணைத்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு QR CODE செயலியுடன் இணைக்கும் வகையில் நம் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயம். அதேசமயம், கணினி வசதியே இல்லாத பள்ளிகளில் இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்வியும் எழுத்திருக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் அந்த செயலியை பயன்படுத்தினாலும் 45 நிமிடங்களுக்குள்  அத்தனைமாணவர்களுக்கும் அதைக் காட்டுவது சாத்தியமில்லை.*

_கூடுதல் சுமை:_


🎙கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாக உருவாக, போதமான எண்ணிக்கையில் ஆசிரியர் இல்லாத சூழல் முக்கியக் காரணம் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இருப்பதால் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தேவையான திறன்களுடன் வெளியே வர முடிவதில்லை. ஏழ்மையான பின்னணி கொண்ட, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் புதிது புதிதாக எழும் அழுத்தங்களால் அப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களிடம் சிறப்பு அக்கறை காட்டும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு இல்லாமல் போகிறது. "எங்களுடைய பெரும்பாலான நேரம் நிர்வாகத்தால் மடைமாற்றப்படும் போது, கற்பித்தலில் அதிகக் கவனம் செலுத்த முடிவதில்லை, என்று ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.

"ஒரு காலத்தில் கல்லூரி அளவில் படித்த பாடங்கள் இன்றைக்கு 9, 10-ம் வகுப்புகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. வேதியியல், இயற்பியல், உயிரியல் என அனைத்திலும் வெறும் பெயர்களைப் படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களைச் சலிப்படையச் செய்கிறது."

_✍படைப்பு_
திருமதி.உமாமகேஸ்வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent