இந்த வலைப்பதிவில் தேடு

பொது மாறுதல் கலந்தாய்வு - ஆசிரியர்கள் அதிருப்தி

சனி, 12 அக்டோபர், 2019




பொது மாறுதல் கலந்தாய்வில் வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றாவிட்டாலும் கலந்து கொள்ளலாம், என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் மற்ற ஆசிரியர் அதிருப்தியில் உள்ளனர்.


தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்க, தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்றாண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் சில ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனால் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் படி கலந்தாய்வு நெறிமுறைகள் குறித்து திருத்தம் செய்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வழக்கு தொடர்ந்தவர்கள் மட்டும் மூன்றாண்டுகள் பணியாற்றாமல் இருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மற்ற ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயலாது. இது மற்ற ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent