இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் பணியிட மாறுதல்: திருத்திய ஆணையை பின்பற்ற வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்

வியாழன், 17 அக்டோபர், 2019




ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், அரசாணையில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி த்துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கவுன்சலிங்  நடத்த வேண்டும் என்று   பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பொதுப் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு கல்வி  ஆண்டில் நடத்த வேண்டிய பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து அரசாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதன்மீது சென்னை உயர்நீதி மன்றம், மதுரை உயர்நீதி மன்ற கிளை ஆகியவற்றில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


அந்த வழக்குகளில் வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் அரசாணையில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

திருத்திய ஆணையை செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து வழக்கு  தொடர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த திருத்தங்கள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 27.8.19 மதுரை உயர்நீதி மன்றக்கிளை வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடியும், 3.10.19ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய  தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றியும், 2019-2020 கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வசதியாக அவர்கள் விவரங்கள் இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்வதற்கு  முன்னதாக நீதிமன்ற உத்தரவுகளை சரிபார்த்து உறுதி செய்த பிறகே பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent