பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
விளக்கம்:
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
பழமொழி
A dwarf threatens Hercules.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.
2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.
பொன்மொழி
ஏமாற்றாமல் வாழ்தலே அறம்.அந்நிலையில் தவறாமல் வாழ்பவர்கள் இறைநிலையை அடைகிறார்கள்....
-----பாரதியார்
பொது அறிவு
1. காந்திஜியின் உருவம் பொறித்த தபால் தலையை முதன்முதலில் வெளியிட்ட நாடு எது?
அமெரிக்கா.
2.காந்திஜி கடைசியாக எந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்தார்?
1946
English words & meanings
* Density - how concentrated a thing is related to it's volume. அடர்த்தி. ஒரு குறிப்பிட்ட கன அளவு உள்ள பொருளில் உள்ள மூலக்கூறுகள் எண்ணிக்கை.
* Doctorate - the highest degree awarded by a University. பல்கலைக்கழகத்தில் அளிக்கப் படும் மிக உயரிய படிப்பிற்கான பட்டம். முனைவர் பட்டம்
ஆரோக்ய வாழ்வு
வெங்காயத்தாள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.
Some important abbreviations for students
Mr. - Mister
Mrs. - Mistress
நீதிக்கதை
மலைப்பாம்பும் மான் குட்டியும்
ஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம்.
மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.
ஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது.
மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்? என்றது.
மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் நீ என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு.
உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன? என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.
நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.
குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது.
அதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்? நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?
குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது.
நீதி :
எப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.
வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு
எல்லைகள் இல்லாத டாக்டர்கள் (Médecins Sans Frontières (MSF)Doctors Without Borders )என்ற அமைப்பு ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு. இயற்கையாகவும் போர் போன்ற நிகழ்வுகளின்போது பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும். 1999 ஆம் ஆண்டு நோபல் பரிசு இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய விளையாட்டு - 5
நூத்தாங்குச்சி விளையாடும் முறையை விளக்கும் நம் மாணவிகளின் காணொலி
காணொலியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய செய்திகள்
11.10.2019
* இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*
கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக். 13 வரை மட்டுமே அனுமதி: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு.
* ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், செங்காந்தள் மலர்கள், ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பூத்துக்குலுங்கி, பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. இது நம் மாநில மலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது.
* பெண்கள் உலக குத்துச்சண்டை - அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்.
Today's Headlines
🌸 Nobel Prizes for Literature 2018 and 2019: Polish Writer Olga Tokarzuk and Austria's Peter Hundke were selected for the Nobel Prize
🌸 Minister Pandiyaraja announced that publics can view the Underground excavation works in kizhadi till 13th October only.
🌸Senkandhal flowers which bloom once in a year , bloomed in the forest area near Ambur .It attracts visitors. It is our state flower.
🌸 In the 2nd Test against South Africa India scored 273 runs with the loss of 3 wickets at the end of the first day's play.
🌸 In Women's World Boxing , Mary Kom advanced to the semifinals.
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக