RECRUITMENT OF CANDIDATES FOR PANCHAYAT SECRETARY: ஒவ்வொரு மாவட்ட இணையதளத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் மூலம் பணியமர்த்தப்படும் இந்த பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.7.2019 தேதியின் படி, 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப்பகுதிக்குள் வசிக்க வேண்டும் அல்லது அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட தகவல் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்புக் கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உங்கள் மாவட்டங்களில் கிளிக் செய்க :
திருவண்ணாமலை - Click Here
மதுரை- Click Here
நாமக்கல்- Click Here
தேனி- Click Here
வேலூர்- Click Here
காஞ்சிபுரம்- Click Here
கரூர்- Click Here
நாகை- Click Here
பெரம்பலூர்- Click Here
ஈரோடு- Click Here
கிருஷ்ணகிரி- Click Here
நாமக்கல்- Click Here
சேலம்- Click Here
திருப்பூர்- Click Here
திண்டுக்கல்- Click Here
ராமநாதபுரம்- Click Here
சிவகங்கை- Click Here
விருதுநகர்- Click Here
கடலூர்- Click Here
விழுப்புரம்- Click Here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக