இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த பிளஸ் 1 மாணவன்

வெள்ளி, 8 நவம்பர், 2019




திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(17). கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும். விக்னேஷ் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு  நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொள்ளாமல் விக்னேஷ் நண்பர்களுடன் பேசிக்கெண்டிருந்தாராம்.


இதை பார்த்த தலைமை ஆசிரியர், விக்னேஷை கண்டித்ததுடன் நாளை வரும்போது உனது பெற்றோருடன் வர வேண்டும் என  கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த விக்னேஷ் பள்ளியின் 3வது மாடி மேல்தளத்தில் இருந்து கீழே குதித்துவிட்டார். கால்கள், தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் அடைந்த அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent