மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்பட வேண்டும்; இது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, 'நடப்பாண்டில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும்; ஆனால், தேர்ச்சி பாதிக்காது' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதற்கான வழி முறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வு குறித்து மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும்போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை அறிந்து, மூன்று ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை, நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக