இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு பயிற்சி

ஞாயிறு, 10 நவம்பர், 2019


அரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை களுக்கு, 'ஸ்மார்ட்' மொபைல் போன் பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக, அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இந்த பயிற்சிக்கு, மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியைகள் வீதம், 192 பேரும், கூடுதலாக, எட்டு ஆசிரியைகளும் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 2,200 ரூபாய் பயிற்சி கட்டணம், அண்ணா மேலாண்மை நிறுவனத்துக்கு செலுத்தப்படும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent