இந்த வலைப்பதிவில் தேடு

அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானது - முழு விபரம்

சனி, 9 நவம்பர், 2019



மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில விவகாரம் தொடர்பான தீர்ப்பு சன்றுமுன் உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு வெளியிட்டது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* அதில்,  சன்னி பிரிவுக்கு எதிராக ஷியா வக்பு போர்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி என தீர்ப்பில் வாசிப்பு.


* நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை - தலைமை நீதிபதி

* பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை,  அந்த இடத்தில் முன்பே கட்டடம் ஒன்று இருந்தது - நீதிபதி ரஞ்சன் கோகாய்


* நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரித்துவிட முடியாது - நீதிபதி ரஞ்சன் கோகாய்

* ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது - தலைமை நீதிபதி

* அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புவதை மறுக்க இயலாது - தலைமை நீதிபதி

* பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல - நீதிபதி ரஞ்சன் கோகாய்

* நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது - தலைமை நீதிபதி

* 1857 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உட்பகுதியில் வழிபட தடையில்லை  - நீதிபதி ரஞ்சன் கோகாய்


* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை  - நீதிபதி ரஞ்சன் கோகாய்

* இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது - ரஞ்சன் கோகாய்

* ஆங்கிலேயர் வருகைக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு - பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன

* அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதை, காலம் காலமாக தொடரும் வழிபாடு நிரூபிக்கிறது - ரஞ்சன் கோகாய்

* சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு

அயோத்தி நிலம், வழக்கு தொடர்ந்த 3 தரப்புகளுக்கும் சொந்தமல்ல - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

* அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் - உச்சநீதிமன்றம்


முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக மாற்று நிலத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்

முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக மாற்று நிலத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகராத்தில் சுப்ரீம் கோர் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent