இந்த வலைப்பதிவில் தேடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

ஞாயிறு, 10 நவம்பர், 2019



நேற்று வெளியிடப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான  தேதிகள் ஒதுக்கப்படவில்லை

இது குறித்து பல்வேறு மாவட்டப் பொறுப்பாளர்களிடம் இருந்து மாநில தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து,

உடனடியாக,
 _பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்_

 ஆகியோரை மாநிலத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது

 *பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலி  பணியிடங்களில் எந்தெந்த பணியிடங்கள் உபரிப்பணியிடங்கள் என இணைய வழி கலந்தாய்வில் கண்டறிவது கடினமாகும்* 

ஆகையால் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் 

*காலி பணியிடங்களை ஆய்விற்கு உட்படுத்தி உபரிப்பணியிடங்களை நீக்கி காலிப்பணியிடங்களை வரைவு செய்து காலிப்பணியிடங்களுக்கு விரைவில் பிறிதொரு நாள் கலந்தாய்வு நடத்தப்படும்* என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent