இந்த வலைப்பதிவில் தேடு

கதறி அழுத பள்ளி மாணவர்களின் பாச போராட்டம் -ஆசிரியர் பிரிவு உபசாரத்தில் நெகிழ்ச்சி

புதன், 20 நவம்பர், 2019



அரசு பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர், வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலில் சென்றபோது, வழியனுப்ப மறுத்து, மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி  அழுதனர்.



கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, வடசித்துார் அரசு மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர் செந்தில்குமார்; 23 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்தார். தற்போது, பதவி உயர்வில், முதுகலை ஆசிரியராக, தொண்டாமுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, பணியிட மாறுதலில் செல்கிறார். நேற்று முன்தினம், ஆசிரியர் செந்தில்குமாருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது, மாணவ - மாணவியர், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு, 'சார் போகாதீங்க; இந்த ஸ்கூல விட்டு போகாதீங்க' என, கண்ணீர் விட்டு அழுதனர்.



இதைப் பார்த்து, ஆசிரியர்களும் கண் கலங்கினர். பிரிவு உபசார விழாவில், பிரிய மனமின்றி ஆசிரியர் செந்தில்குமார் விடைபெற்றார்.மாணவர்கள் கூறியதாவது:.





மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், பெற்றோர், மாணவர்களை அழைத்து, கவுன்சிலிங் செய்து, ஆசிரியர் செந்தில்குமார் படிக்க வைப்பார். பாடங்களை புரியும் வகையில் நடத்தினார்.இதனால், ஆசிரியர், மாணவர்கள் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ளது. சக ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றால், அந்த ஆசிரியரின் பாடங்களையும் சேர்த்து நடத்துவார்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent