இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வருடம் விட்டு விட்டீர்கள் என்றால் அடுத்தது 2031 தான்.. மிஸ்பண்ணி விடாதீர்கள்..!!

திங்கள், 23 டிசம்பர், 2019



பூமிக்கும் - சூரியனிற்கும் இடையேயான நேர்கோட்டில் சந்திரன் வரும் நேரத்தில்., சூரியன் மறைக்கப்படுகிறது. சரியாக கூற வேண்டும் என்று கூறினால்., சந்திரனின் நிழல் பூமியில் விழும் நிகழ்வே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைத்துக்கொண்டு இருந்தால் முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.


சூரியனுடைய மைய பகுதியினை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பு பகுதியில் வலயம் போல ஒளியானது தெரியும் வேளையில் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். இந்த வளைய சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதியான வியாழக்கிழமை (26/12/209) அன்று ஏற்படவுள்ளது.


இந்த சூரிய கிரகணம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்துடைய தென் பகுதியிலும்., கேரளா மாநிலத்தின் வடபகுதியில் தெரியும். இக்கிரகணத்தை தமிழ்நாட்டில் அதிகளவு பார்க்க இயலும். வரும் 26 ஆம் தேதி காலை 8 மணிமுதலாக காலை 11 மணிவரையிலும் இதனை காணலாம்.

தமிழகத்தில் குறிப்பாக கோயம்புத்தூர்., புதுக்கோட்டை., ஈரோடு., திருச்சி., நீலகிரி., திருப்பூர்., கரூர்., திண்டுக்கல்., மதுரை மற்றும் சிவகங்கை போன்ற 10 மாவட்டங்களில் முழுமையாக காண இயலும். பிற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை காண இயலும்.


இந்த சூரிய கிரகணத்தை காணுவதற்கு தமிழகத்தில் 11 இடங்கள் விஞ்ஞான் ப்ராசசர் மற்றும் அறிவியல் பலகை., கணித அறிவியல் நிறுவனம் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஞ்ஞான அதிகாரிகள் தெரிவித்த சமயத்தில்., கடந்த 2010 ஆம் வருடத்தின் போது கன்னியாகுமரியில் பொங்கல் தினத்தன்று சூரிய கிரகணம் தெரிந்தது. அந்த நேரத்தில் பொங்கல் சூரிய கிரகணம் என்று அழைத்தோம். தற்போது இவ்வருடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி சூரிய கிரகணம் ஏற்படுவதால்., கிறிஸ்துமஸ் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.


இக்கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது நல்லதல்ல. இதற்காக இருக்கும் பிரத்தியேக கண்ணாடியின் வழியாக காணலாம். இதற்க்காக தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களில் பார்வையிடவும்., தலைநகர் சென்னையில் பகுதியாக தெரிந்தாலும் அங்கும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிரகணம் அடுத்தபடியாக ஏற்படும் 2020 ஆம் வருடத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும்., வரும் 2031 ஆம் வருவதில் தமிழகத்தின் மதுரை மற்றும் தேனீ மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை காணலாம் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent