தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகை நலத்திட்டங்கள் அமலில் உள்ளன. இலவச பாடப் புத்தகம், இலவச நோட்டு புத்தகம், கணித உபகரண பெட்டி, இலவச புத்தகப் பை, வரைபடம், 'கிரயான்ஸ்' எனப்படும் வண்ண பென்சில்கள், சைக்கிள், லேப்டாப் என, பல இலவசங்கள் வழங்கப் படுகின்றன.
இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள இலவச புத்தகப் பையை, நடப்பாண்டு மாணவர்களுக்கு வழங்கும் பணி துவங்கி உள்ளது. இந்தாண்டு, இரண்டு விதமான வண்ணங்களில் புத்தகப் பைகள் வழங்கப் படுகின்றன. ஏற்கனவே, கறுப்பு நிறத்தில் புத்தக பை வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கருநீலம் மற்றும் பிங்க் நிற பைகள் வழங்கப் படுகின்றன.
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, பிங்க் பையும், மற்ற மாணவர்களுக்கு கருநீல நிற பையும் வழங்கப் படுகின்றன. மாவட்ட வாரியாக பைகள் அனுப்பப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களால், மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக