இந்த வலைப்பதிவில் தேடு

3ம் வகுப்பு சிறுவனின் கை, கால்களை கட்டிவைத்து பள்ளியில் தண்டனை

திங்கள், 2 டிசம்பர், 2019



ஆந்திராவில் காதல் கடிதம் எழுதியதற்காகவும், பொருட்களை திருடியதற்காகவும் பள்ளி சிறுவர்களை கட்டிவைத்து தண்டித்ததற்காக பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.


ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் கை, கால்களை மேஜையில் கட்டி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, சிறுவர்களை கொடுமைப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறும்போது, ஒரு மாணவன் காதல் கடிதம் எழுதியதற்காகவும் மற்றொரு மாணவன் பிறரின் பொருட்களை திருடியதற்காகவும் தண்டிக்கப்பட்டதாக கூறினார். அதுவும், மாணவர்களின் பெற்றோர் தான் இவ்வாறு கட்டிவைத்ததாகவும் குறிப்பிட்டார்.


இதற்கு சமூக ஆர்வலர்களில் ஒருவரான அச்யுத்தா ராவ் கூறுகையில், தலைமை ஆசிரியை சொல்வது போல் பெற்றோர் தண்டித்தாக எடுத்துக்கொண்டாலும், பள்ளிக்குள் வந்து அவர்கள் இவ்வாறு தண்டிக்க நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது? மாணவர்களை தண்டித்த பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent