இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திங்கள், 2 டிசம்பர், 2019



3 ஆண்டுகளாக நடக்காமல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித்தேர்தல் நீண்ட இழுபறிக்குப்பின் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டுக்கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் 1970-களில் நடத்தப்பட்ட உள்ளாட்சித்தேர்தல் பின்னர் நடத்தப்படாமலே இருந்தது. பின்னர் ராஜிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து தேர்தல்களை முறையாக நடத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டப்பின் உள்ளாட்சிப்பிரதிகளை தேர்வு செய்யும் தேர்தல் முறையாக நடக்கத்தொடங்கியது.
நீண்ட ஆண்டுகளாக நடக்காமல் இருந்த தமிழக உள்ளாட்சித்தேர்தல் 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மீண்டும் நடத்தப்பட்டது.


அதன் பின்னர் 20 ஆண்டுகள் உள்ளாட்சித்தேர்தல் முறையாக நடந்தது. ஆனால் 2016-க்குப்பின் மீண்டும் உள்ளாதமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சித்தேர்தலை முறையாக நடத்த வேண்டும், என வழக்குத்தொடரப்பட்டதால் மேலும் தள்ளிப்போனது. இறுதியாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டிச. 2-க்குள் உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.


தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும். வேட்புமனுத்தாக்கல் டிச.6, வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் டிச.13, வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நிர்வாகக்காரணங்களுக்காக அது பின்னர் அறிவிக்கப்படும். மறைமுகத்தேர்தலுக்கான ஜனவரி 11 அன்று நடைபெறும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent