இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி 3ம் தேதி திறப்பு ஏன்?

செவ்வாய், 24 டிசம்பர், 2019



உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, பள்ளிகள் திறப்பு, ஜனவரி, 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும், 27, 30ம் தேதிகளில் நடக்கிறது. வரும், 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி, ஜன., 2ல் இருந்து, 3க்கு மாற்றப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில், 'அரையாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்து, இன்று முதல் விடுமுறை துவங்குகிறது. வரும், 2ம் தேதி வரை, 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டு உள்ளது. மேலும், ஜனவரி, ௩ல், பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளன.


அதனால், பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பொதுத்தேர்வு நடைமுறையில் உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 6 முதல், திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இடம் பெற்ற பாடங்களும், பொது தேர்வுக்காக முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களும் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent