இந்த வலைப்பதிவில் தேடு

‘லீக்’ ஆன கேள்வித்தாள் - கண்டுபிடிப்பது சிரமம் - போலீசில் புகார்

செவ்வாய், 24 டிசம்பர், 2019



அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கியது. அதற்கான கேள்வித்தாள் பள்ளிக் கல்வி துறை மூலம் அச்சிட்டு வழங்கப்பட்டது. தேர்வு நடந்த நாட்களின் இடையில் சில பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  9ம் வகுப்புக்கான கேள்வித்தாள், பிளஸ் 2 வேதியியல் கேள்வித்தாள் ஆகியவை இப்படி வெளியானது. மதுரை முகவரியில் இயங்கும் ஒரு சமூக வலைத் தளத்தில் இந்த கேள்வித்தாள்கள் வெளியாகி வந்தன. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை விசாரித்து வரும் நிலையில், இறுதி நாளான நேற்று பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான உயிரியல் தேர்வும், பத்தாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வும் நடந்தன.
முன்னதாக 22ம் தேதியே இந்த பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.


இந்த விவகாரம் நேற்று காலை முதலே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, வேறு கேள்வித்தாள் மாற்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், சில மாவட்டங்களில் மட்டும் கேள்வித்தாள் மாற்றி வழங்கியதாக தெரிகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதே ேகள்வித்தாளை வழங்கி தேர்வு  நடத்தியுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தான் கேள்வித்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில் அவை லீக் ஆனது மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்விதுறையின் சார்பில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.


கண்டுபிடிப்பது சிரமம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், `அரையாண்டு தேர்வில் பிளஸ் 2 உயிரியல், சமூக அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்தது. தேர்வுத்துறையின் மூலம் வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறுந்தகடு மூலம் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதனால், எங்கு வெளியானது என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது ‘ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent