இந்த வலைப்பதிவில் தேடு

தேர்தல் பணிக்கான சம்பளம் நிர்ணயம்

செவ்வாய், 24 டிசம்பர், 2019



உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான சம்பளத்தை, மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்வான அலுவலர்களுக்கு, இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்றுள்ளன.
இறுதியாக இன்னும், ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. தற்போது, தேர்தல் அலுவலர்களுக்கான சம்பளத்தை, மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்து உள்ளது.


ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு, தலா, 350 ரூபாய் வீதம், மூன்று நாள் பயிற்சிக்காக, 1,050 ரூபாய்; ஓட்டுப்பதிவு நாள், அதற்கு முந்தைய நாள், ஓட்டு எண்ணும் நாளில் பணியாற்றினால், தலா, 350 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு மற்றும் அதற்கு முந்தைய நாளுக்கு, உணவு செலவிற்காக, தலா, 150 ரூபாய் வழங்கப்படும்.


ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, மூன்று நாள் பயிற்சிக்காக, தலா, 250 ரூபாய் வீதம், 750 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு நாள், அதற்கு முந்தைய நாள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையின் போது பணியாற்றினால், தலா, 250 ரூபாய் தரப்படும்; ஓட்டுப்பதிவு நாள் மற்றும் முந்தைய நாளுக்கு உணவு செலவிற்காக, தலா, 150 ரூபாய் வழங்கப்படும்.

ஓட்டுச்சாவடி உதவி அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு நாள், அதற்கு முந்தைய நாள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளுக்கு, தலா, 150 ரூபாய் தரப்பட உள்ளது. இந்த தகவல், தேர்தல் நடக்கவுள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent