இந்த வலைப்பதிவில் தேடு

6 மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை

செவ்வாய், 24 டிசம்பர், 2019



ஆறு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென் மாவட்டங்களில் நிலவும், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்ட கடலோர பகுதிகளில், ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். உள்மாவட்டங்களிலும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.


தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதியில், 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. மீனவர்கள் செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் வால்பாறையில் மட்டும், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent