இந்த வலைப்பதிவில் தேடு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வியாழன், 12 டிசம்பர், 2019



தமிழகத்தில்  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டி உள்ள உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்கனில் கனமழை பெய்யலாம்.



சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து

 

Popular Posts

Recent