இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள் குறைகள் தேவைகள் என்ன - கல்வித்துறை ஆணையர் ஆலோசனை

வியாழன், 12 டிசம்பர், 2019



தமிழக பள்ளி கல்வித்துறை ஆணையர் 7 மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நேற்று ஆலோசனை நடத்தினார்.


தமிழக பள்ளி கல்வித்துறையின் புதிய ஆணையராக சுகி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று திருச்சியில் தனியார் ஆங்லோ- இந்தியன் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் 7 மாவட்டங்களில் உள்ள 134 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு நன்கு கற்பிக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் பள்ளிக் கல்வியின் தரம் பற்றி தனித்தனியாக கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் 7 விதமான தலைப்புகளை முன் வைத்து விளக்கம் கேட்டறிந்தார். அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள் குறைகள் தேவைகள் குறித்தும் கேட்டார்.


நேற்று காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு வரை நீடித்தது. கூட்டம் நடந்த பள்ளியிலேயே கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent