இந்த வலைப்பதிவில் தேடு

FLASH NEWS : 18.12.2019 இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் பள்ளிகளில் நேரில் ஆய்வு !! Proceedings

செவ்வாய், 17 டிசம்பர், 2019




தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை 18.12 .2019 அன்று ஆய்வு செய்யவுள்ளதால் , அது சமயம் பள்ளி செயல்பாடுகள் சார்ந்த விவரங்கள் , மாணவர் இடைநிற்றல் விவரங்கள் , பள்ளி வளாக துய்மை , பாதுகாப்பு பராமரிப்பு விவரங்கள் , பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் ஆகியவை சார்பாக பள்ளிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தலைமையாசிரியர் ஆய்விற்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .





18 . 12 . 2019 புதன்கிழமை பிற்பகல் 2 . 00 மணியளவில் காட்பாடி , காந்திநகர் , எஸ் . எஸ் . ஏ . கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் தலைமையிலான மீளாய்வுக்கூட்டத்தில் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டாரவள மைய பொறுப்பாளர்கள் ( BRC ) மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent