இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 17.12.2019

செவ்வாய், 17 டிசம்பர், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்


திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

விளக்கம்:

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு பொருளின் தொடர்பு எதற்காக?

பழமொழி

A man is known by the company he keeps.

 நம் நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

உங்கள் எண்ணங்களை மாற்றினால் உங்களால் உலகையே உயர்த்த முடியும்.

---- நார்மன் வின்சென்ட் பீல்

பொது அறிவு

1. மராத்திய மாமன்னர் வீரசிவாஜி எதிரிகளின் கோட்டையை கைப்பற்றிய போது அவரின் வயது என்ன?

அவரின் வயது 13.

2. தாகூர் ஆரம்பித்த சாந்திநிகேதன் என்பதற்கு பொருள் என்ன?

சூரிய ஒளி பள்ளி

English words & meanings

Gynaecology - study of the reproductive parts of the women. பெண்களின் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட படிப்பு மற்றும் அறிவியல்.

Gainful - serving to increase wealth. ஆதாயமுள்ள

ஆரோக்ய வாழ்வு

தினமும் துளசி இலையை மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Some important  abbreviations for students

YT = YouTube

DM = Direct Message

நீதிக்கதை

புரட்சி எண்ணம்

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது. குளிர்காலம் வந்தது .

குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோடு அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழுந்துவிட்டது. அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாண்ம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது.

சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும், மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது. அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

இன்றைய செய்திகள்

17.12.19

◆உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் இன்று பரிசீலனை.

◆அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும் என்று முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

◆காயமடைந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவியுங்கள் என்று டெல்லி சிறுபான்மை ஆணையம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

◆ஏமனில் 2020-ம் ஆண்டில் வன்முறைகள் குறையும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

◆நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 The filing of nominations for the local government elections ended yesterday.  Nomination form Wil be reviewed today.

🌸In First World Tamil Music Conference resolution has been taken to make music as a subject of all schools in Tamilnadu

 🌸 The Delhi Minority Commission has ordered the police to immediately release the injured Jamia University students.

 🌸 United Nations organisation saysthat violence will decrease in Yemen by 2020

🌸 Australia won by 296 runs in the first Test against New Zealand.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent