புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாளை காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டத்தொடரின்போது குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப, பிரதான எதிர்க்கட்சியான திமுக தயாராகி வருவதால், பேரவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் இதுதொடர்பான சூடான விவாதங்களும் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக