இந்த வலைப்பதிவில் தேடு

குரூப் 4 தேர்வில் முறைகேடு?

ஞாயிறு, 5 ஜனவரி, 2020














டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம்(1606)மற்றும் கீழக்கரையை (1608)தேர்வு மையமாக தேர்ந்தெடுத்து தேர்வு எழுதி 40க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் பெற்றுள்ளனர். தங்களது இன வாரியாக முதல் 50 இடங்களை பெற்றுள்ளனர்... அது பற்றிய தொகுப்பை தற்போது அனுப்பியுள்ளேன் .... இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்...... வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் ஏன் இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.. எவ்வாறு இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றனர்... மேலும் மாநில அளவில் முதலிடம் பெற்ற நபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர் தங்களது மாவட்டத்தில் தேர்வு எழுதாமல் 4 மணி நேரம் பயணம் செய்யவேண்டிய ராமேஸ்வரத்தை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதி உள்ளார்.... மேலும் இந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மாநில அளவில் இடம் பெற்றவர்களில் அநேகமான நபர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.... அனைவரும் இந்த தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியுள்ளனர்.. அதற்கான நோக்கம் என்ன??? இதுபோன்ற குரூப்-4 தேர்வில் இந்த இரண்டு தேர்வு மையங்களில் தேர்ச்சி பெற்ற நபர்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent