இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதற்காக, மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.புதுச்சேரியை பொறுத்தவரை, தனியாக கல்வி வாரியம் இல்லை. தமிழக கல்வி வாரிய பாடத்திட்டம்தான் பின்பற்றப்படுகிறது. அதனால், புதுச்சேரியிலும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், 'புதுச்சேரியில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு பள்ளிகளில் அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்தும், வேறு பள்ளிகளில் விடைத்தாள் திருத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இதன் முடிவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை பொறுத்து, பொதுத்தேர்வு கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என, தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக