இந்த வலைப்பதிவில் தேடு

5,8th Public Exam 2020 - விடைத்தாள் மதிப்பீட்டு பணி எப்படி நடைபெறும் - இயக்குனர் தெளிவுரை

புதன், 22 ஜனவரி, 2020

விடைத்தாள் மதிப்பீட்டு பணி

வினாத்தாள் கட்டு காப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் பெறப்படும் பள்ளி வாரியான விடைத்தாட்களை அன்றைய தினமே அந்த வினாத்தாள் கட்டுகாப்பு மையத்திற்கு உட்பட்ட பிற பள்ளிகளுக்கு மதிப்பீட்டு பணிக்காக மாற்றி கொடுத்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற வேண்டும் . 


மேலும் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்படும் விடைத்தாள்கள் குறிப்புகளையும் விடைத்தாள் கட்டுகளுடன் சேர்த்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் . மதிப்பீட்டு பணி நிறைவடைந்தவுடன் 5 ஆம் வகுப்பிற்குரிய விடைத்தாட்களை 28 . 04 . 2020 க்குள்ளும் , 8 ஆம் வகுப்பிற்குரிய விடைத்தாட்களை 25 . 04 . 2020 க்குள்ளும் , சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்படைக்க சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் .

மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாத்தல் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும் . அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கோரப்படும்போது விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் .


மதிப்பெண் பதிவேடு



பள்ளி வாரியான மதிப்பெண் பட்டியலை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்று வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் . தங்கள் மாவட்டத்தில் மாநில பாடதிட்டத்தினை பின்பற்றி செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .


மேலும் , இப்பொருள் சார்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent