இந்த வலைப்பதிவில் தேடு

டி.ஆர்.பி., தேர்விலும் முறைகேடு; நடைமுறைகள் மாற்றப்படுமா?

புதன், 29 ஜனவரி, 2020



டி.என்.பி.எஸ்.சி.,யை போல, டி.ஆர்.பி., தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு நடைமுறைகளை மாற்ற, கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி உளளன. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, இடைத்தரகர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கைது செய்து வருகின்றனர். அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் தேர்விலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அகில இந்திய தனியார் கல்லுாரிகளின் ஊழியர்கள் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் பேராசிரியர் கார்த்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகார்: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவியில், 1,060 காலியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி., தேர்வில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, மதிப்பெண்களை திருத்தி, முறைகேடு நடந்துள்ளது. கேடு செய்த, அனைத்து தேர்வர்கள் மீதும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தகுதி நீக்கமும் செய்யவில்லை. அவர்கள், பணம் வாங்கிய இடைத்தரகர்களை அணுகுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அவர்களை, அரசு பதவியில் சேர தடை விதிக்க வேண்டும்.


அதேபோல், கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவிக்கு, 2,331 பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் முறைகேடு நடப்பதற்கு, அதிக வாய்ப்புள்ளது. தனியார் கல்லுாரிகளில் தரப்படும் அனுபவ சான்றிதழை, மதிப்பெண் கணக்கில் எடுக்க கூடாது. அடிப்படை கல்வி மற்றும் தகுதி சான்றிதழ்களை வைத்து மட்டும், விண்ணப்பங்களை ஏற்க வேண்டும். அனைவரது மதிப்பெண் விபரங்களை, மற்றவர்கள் பார்க்கும் வகையில், வெளிப்படையாக வெளியிட வேண்டும். முறைகேடுக்கு வழிவகுக்காமல், தேர்வு மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை மாற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 கருத்துகள்

  1. சிறப்பாசிரியர் தேர்விலும்
    முறைகேடு தமிழ்வழி

    பதிலளிநீக்கு
  2. PG TRB யிலும்,TET தேர்விலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்குமே.

    பதிலளிநீக்கு

 

Popular Posts

Recent