இந்த வலைப்பதிவில் தேடு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்த தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு..!!!

புதன், 29 ஜனவரி, 2020





பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.


தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதப்படி 2019 - 2020ஆம் கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத் திட்டத்தை பின்பற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே கல்வியாண்டின் இறுதியில் 8 ஆம் வகுப்பிற்கு நடைபெறவுள்ள இத்தேர்வில் முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவப்பாட புத்தகங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதால் , மூன்று பருவப் பாடக் கருத்துகளையும் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறுதேர்வுகள் , வினாத்தாள்கள் மூலம் மீள்பார்வை செய்திட 8ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு தெரிவித்திட வட்டாரக் கல்வி அலுவலர்கள் / குறுவளமைய தலைமையிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . நாள்தோறும் மாலை வேளைகளில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்துதல்

2 . திங்கள் - தமிழ் , செவ்வாய் - ஆங்கிலம் , புதன் - கணிதம் , வியாழன் - அறிவியல் , வெள்ளி - சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு தேர்வு நடத்துதல்

3 . இணைப்பு 1ல் உள்ளவாறு 5 பாடங்களுக்கும் மாலை நேரங்களில் முதல் இரண்டு பருவ பாடப்பகுதிகளில் தேர்வு நடத்துதுல்

4 . இணைப்பு 2ல் உள்ள Question Pattern அடிப்படையில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்துதல்


5 . பள்ளி நேரங்களில் மூன்றாம் பருவ பாடப்பகுதிகளிலிருந்து சிறு தேர்வு நடத்துதல் மேற்கண்டவாறு கற்றல் விளைவுகள் சார்ந்து மூன்று பருவங்களிலிருந்தும் வினாத்தாள் தயார் செய்து 8ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு சிறப்பான முறையில் மாணவர்களை தயார் செய்திடவும் , இத்தேர்வு நடைபெறுவதை முறையாகக் கண்காணித்திடவும் அனைத்து மேல்நிலை , உயர்நிலை மற்றும் உயர்தொடக்கநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

அனைத்து மேல்நிலை , உயர்நிலை மற்றும் உயர்தொடக்கநிலைப் பள்ளிகளிலும் மேற்கண்ட வழிமுறைகளின் அடிப்படையில் 8ஆம் வகுப்பிற்கு தேர்வு நடைபெறுவதை தங்கள் பார்வையில் உறுதி செய்திட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் , குறுவளமையத் தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர்பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent