இந்த வலைப்பதிவில் தேடு

தள்ளிப்போகிறது நகர்புற உள்ளாட்சி தேர்தல் : மே மாதம் நடக்க வாய்ப்பு

புதன், 29 ஜனவரி, 2020





தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், வார்டு வரையறை செய்யும் பணியை, மார்ச், 5க்குள் முடிக்க, வார்டு மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வார்டு வரையறை பணி, மார்ச் வரை நடக்க உள்ளதால், ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், மே மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.


தமிழகத்தில், புதிய மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, கடந்த மாதம் நடத்தப்பட்டது. ஜன., 2ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள், பணிகளை துவக்கி உள்ளனர்.

சென்னை தவிர்த்து, தேர்தல் நடத்தப்படாமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், மூன்று மாதங்களுக்குள், தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.இதற்கான ஆயத்தப் பணிகளை, மாநிலத் தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை பணியை, அதற்கான ஆணையம் துவக்கி உள்ளது.

புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை தொடர்பான அறிவிப்பு, இன்று வெ ளியாக உள்ளது.புதிய வார்டு வரையறை வரைவு பட்டியல், நாளை வெ ளியிடப்படும். இது தொடர்பாக, பிப்., 8 வரை, கருத்து தெரிவிக்கலாம்; அதன் மீது, பிப்., 15க்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், வார்டு வரையறை வரைவு பட்டியல், துறை தலைமைக்கு அனுப்பப்படும்.


பிப்., 20ல், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, ஆணையம் வெ ளியிடும். பிப்., 27 காலை, 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மாலை, 3:00 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்திலும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதேபோல், பிற மாவட்டங்களுக்கும், தேதிகள் அறிவிக்கப்படும். வார்டு வரையறை இறுதி பட்டியல், பிப்., 29ல் வெ ளியாகும். புதிய வார்டு வரையறை விபரம், மார்ச் 5ல், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், வார்டு வரையறை பணியை, முறையாக முடிக்கும்படி, வார்டு வரையறை ஆணையம், உறுப்பினர் செயலர் சுப்ரமணியன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகள் இயக்குனர், இரு மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.

இதேபோல், மற்ற மாவட்டங்களிலும், வார்டு வரையறை பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, மார்ச் வரை, வார்டு வரையறை பணி நடக்க உள்ளதால், அதன் பின்னரே, தேர்தல் நடத்த முடியும்.ஏப்ரலில் பள்ளித் தேர்வுகள் நடக்கும். எனவே, வார்டு வரையறை பணி முடிந்து, ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், மே மாதம் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடக்கும். அதற்கு முன், தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு என, மாநில தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்தது.


புதிய ஒன்றியங்கள்!



புதிய மாவட்டங்களில், ஊராட்சி ஒன்றியங்கள், ஏற்கனவே உள்ளபடி இருப்பதால், அதில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. ஆனால், மாவட்ட ஊராட்சி வார்டுகளில், மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை வார்டுகள், அவற்றுக்கான இட ஒதுக்கீட்டை, முடிவு செய்ய வேண்டி உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரிக்கப்பட்டுள்ள ஒன்றியங்கள் விபரம், தமிழ்நாடு அரசிதழில் வெ ளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியங்கள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சரப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனித தோமையார் மலை ஒன்றியங்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent